உலகம்கவர் ஸ்டோரி

செவ்வாய் கிரகத்திற்கு பாய்ந்தது விண்கலம் – யூ.ஏ.இ. சாதனை

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை, முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செலுத்தி சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்கலத்தை செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் அரசும் இணைந்துள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள தனேகாஷிமா ஏவுதளத்தில் இருந்து எச் 2 ஏ ராக்கெட் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் இன்று காலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. புவி வட்டப் பாதையில், 7 மாதங்கள் பயணிக்கும் இந்த விண்கலம், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் காலநிலை, பருவநிலைகள், ஆக்சிஜன் ஆகியவற்றை ஏறத்தாழ 675 நாட்கள் ஆய்வு நடத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 6 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், வெற்றி பாதையில் பயணித்து வருவது, ஐக்கிய அரபு அமீரகம் அரசுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Related Articles

12 Comments

  1. I’ve been surfing on-line more than 3 hours lately, but I never found any fascinating article like yours. It is lovely price sufficient for me. In my opinion, if all site owners and bloggers made excellent content material as you probably did, the web will be much more useful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button