அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடுவைரல்

நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம், கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, வீடியோ வெளியிட்ட சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்த 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களையும் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நீக்கினர்.

இந்தநிலையில், கந்தகஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்களை நீக்கிய  தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், கந்தகஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கந்தகஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்களை நீக்கியதற்கும் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இனியாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியுட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related Articles

6 Comments

  1. I have not checked in here for a while because I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I’ll add you back to my everyday bloglist. You deserve it my friend 🙂

  2. I was just looking for this information for some time. After six hours of continuous Googleing, at last I got it in your web site. I wonder what is the lack of Google strategy that don’t rank this type of informative websites in top of the list. Usually the top sites are full of garbage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button