விளையாட்டு

செப்டம்பர் 26ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்??

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தள்ளி வைக்க பட்டது. இந்தியாவில் கொரோனா நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்தியாவில் நோய்த்தொற்று அதிகளவில் இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தலாமா என்றும் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 நாட்களில் 60 போட்டிகளை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க ஐ.பி.எல் போட்டிகளை தீபாவளிக்கு முன்பாகவே நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதற்கு ஸ்டார் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகளை தீபாவளிக்கு முன்பாகவே நடத்தி முடித்தால் விளம்பர வருவாய் பாதிக்கும் என ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்றுள்ள ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. காலஅட்டவணையை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் பெரும்பாலும் பிற்பகலில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்ததற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆகையால் ஐ.பி.எல். போட்டிகளுக்கான காலஅட்டவணையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது

எது எப்படி ஆயினும் ஐ.பி.எல் போட்டி நடத்துவது உறுதியாகி இருக்கும் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button