தமிழ்நாடு

பணம் கேட்டதற்காக பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சியில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில், ஷீலா ராணி என்பவர் சித்தேரிபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் இயேசு மணி தனியார் பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். இயேசுமணிக்கு போதிய வருமானம் இல்லாததால் கடன் சுமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மதுப்பழக்கத்திற்கு ஆளான யேசுமணி, தனது மனைவி ஷீலா ராணியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே கடந்த சில நாட்களாக குடும்ப சண்டை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஷீலாராணி தனது துப்பட்டாவைக் கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலையில் ஷீலாராணி தூக்கில் தொங்குவதை கண்ட அவரது குடும்பத்தார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்துபோன ஷீலா ராணியின் சகோதரர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

4 Comments

  1. Hmm is anyone else encountering problems with the images on this blog loading? I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog. Any suggestions would be greatly appreciated.

  2. I have been browsing online greater than 3 hours as of late, but I by no means discovered any fascinating article like yours. It’s pretty value sufficient for me. In my view, if all site owners and bloggers made good content as you did, the web will likely be a lot more useful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button