அரசியல்தமிழ்நாடு

பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு பாஜகவில் மாநில இளைஞர் அணி செயலாளர் பதவி??

பணமதிப்பிழப்பு காலத்தில் பண மோசடி செய்ததாக கூறப்பட்ட நபருக்கு பாஜகவில் மாநில இளைஞர் அணி பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 இல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அதில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அதற்கு பதிலாக புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமலும் மக்கள் திண்டாடினார். மேலும் மக்கள் வங்கி கணக்கில் இருந்து குறைந்த அளவு பணத்தையே எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரத்தில் சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசில் அருண் என்கிற நபர் சிக்கினார். அவரிடம் சோதனை செய்யப்பட்டதில் 20 லட்சம் மதிப்புள்ள புதிய 500,2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதை குறித்து அவரிடம் கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் அப்போது பாஜக கட்சியில் இருத்தலால் பாஜக தலைமையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அருணை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் பாஜகவில் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

4 Comments

  1. Hi, i think that i saw you visited my site thus i got here to “return the prefer”.I’m attempting to to find things to improve my web site!I suppose its adequate to use a few of your ideas!!

  2. I think this is one of the most important information for me. And i am glad reading your article. But want to remark on some general things, The website style is great, the articles is really excellent : D. Good job, cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button