கவர் ஸ்டோரிதமிழ்நாடு

மீண்டும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

பேராவூரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பாகுபாடு இல்லாமல் அனைத்து தர மக்களிடம் பரவி வருகிறது. குறிப்பாக, அமைச்சர்கள், அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்களும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் அவரது உதவியாளர் கணேசனுக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என இதுவரை 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

8 Comments

  1. With havin so much written content do you ever run intoany problems of plagorism or copyright infringement?My website has a lot of completely unique content I’ve either written myself or outsourced but it lookslike a lot of it is popping it up all over the web without my agreement.Do you know any techniques to help protect against content from being stolen? I’d certainly appreciate it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button