11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டுதல்களை  பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

அரசு, மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும்.ஏதேனும் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு 15% வரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மிக அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், பள்ளி அளவில் தேர்வு வைத்து மாணவர்களை அனுமதிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.  ஜூன் 3-ம் வாரத்தில் வகுப்புகளைத் துவங்க வேண்டும் என்றும் +2 மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்தலாம் என்று  நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.