உலகம்

தண்ணீரில் கண்டம்.. குளித்தாலே உயிர்போகும் நோயால் அவதிப்படும் சிறுமி…

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தண்ணீரால் ஏற்படும் அலர்ஜி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் ஒரு காமெடி காட்சியில் தனக்கு தண்ணீரில் கண்டம் ஏற்பட்டால் என்ன மாதிரியான சிக்கலை எதிர்கொள்வோம் என காட்டியிருப்பார். அப்படியான ஒரு தண்ணீர் கண்டத்தால் 12 வயது சிறுமி ஒருவர் அவதிப்பட்டு வருகிறார்.

டேனியல் மெக்ரீவன் என்ற அந்த சிறுமி அக்வாஜெனிக் உர்டிகேரியா என்ற நோயால் தான் அவதிப்பட்டு வருகிறார். இது மிகவும் அரிதான, அதே சமயம் ஆபத்தான நோய். இந்நோயால் உலகளவில் 100க்கும் குறைவானவர்களே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். டேனியல் எப்போதெல்லாம் தண்ணீரோடு தன்னை தொடர்பு படுத்தி கொள்வாரோ அப்போதெல்லாம் அவரை கண்காணிப்பு வளையத்தில் தான் இருக்கிறாராம்.

உதாரணமாக வியர்வை ஏற்பட்டால் கூட அது உடலில் அரிப்பை போன்ற அலர்ஜியாக மாறிவிடுகிறது. இது அதிகப்பட்சமாக ஒரு வாளி தண்ணீரில் குளிப்பது கூட அவரது உயிருக்கு ஆபத்தாய் முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button