சென்னைதமிழ்நாடு

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல் ;

சென்னை  வண்டலூர்  பைபாஸ் சாலையில் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்ட 205 கிலோ கஞ்சா பறிமுதல .

கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .அதனை தொடர்ந்து போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.மேலும் கடத்திவர பட்ட கஞ்சா செங்கல்பட்டு  சுற்றுவட்டாரப் பகுதிகளான மாமல்லபுரம் கேளம்பாக்கம் செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

மேலும் கடத்தி வரபட்ட 205 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த 4 பேரையும் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button