படுத்த படுக்கையான தாய்… காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 குழந்தைகள்…

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று அவருடைய 3 குழந்தைகளும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்தவர் உஷா. இவருடைய கணவர் வீராச்சாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டு வேலை செய்து உஷா மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.
கொரோனா காலத்தில் உணவுக்கு சிக்கலாகவே, கிடைத்த உணவை குழந்தைகளுக்கு அளித்து விட்டு , தனக்கு தண்ணீர் மட்டுமே உணவாக எடுத்து வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென உஷா விற்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார்.
எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தவித்து வந்த நிலையில் உஷாவை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான பக்ருதீன்,கார்த்திக் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் உஷாவின் உடல்நிலை பாதிப்பு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் உத்தரவின்பேரில் சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் வட்டாட்சியர் தரணிகா ஆகியோர் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட உஷாவிற்கு ஆறுதல் கூறினர். மேலும் அவருடைய கோரிக்கை ஏற்று 3 குழந்தைகளையும் தஞ்சையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர் .
உஷாவுக்கு காப்பகத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுடனும் பேசுவதற்கு செல்போன் ஒன்றையும் வழங்கிய சார் ஆட்சியர் பாலச்சந்தர், உஷாவிடம் நீங்கள் தைரியமாக இருங்கள் என்றும் உங்கள் குழந்தைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி ஆறுதல் கூறினார்.
I sold it to my sister, I like it, and it’s good.