தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் – பயணிகள் மகிழ்ச்சி
விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் ரயில் எப்போது இயக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை...

தமிழகத்திற்கு நாளை முதல் (அக்டோபர் 2) கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன. தமிழகத்திலும் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. மேலும் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும் என்ற நிலையும் இருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு ரயில்கள் இயக்கப்பட்டும், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் முன்பதிவு நடைபெற்றதால் பயணிகள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நாளை முதல் (அக்டோபர் 2 ஆம் தேதி) மேலும் 7 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-மதுரை, சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம், சென்னை எழும்பூர்- கொல்லம்,சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா,காரைக்கால்-எர்ணாகுளம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
dapoxetine effectiveness over time https://salemeds24.wixsite.com/dapoxetine
does vidalista really work https://vidalista.mlsmalta.com/
naltrexone prescribing doctors https://naltrexoneonline.confrancisyalgomas.com/
hydroxychloroquine dosage for coronavirus https://hydroxychloroquinee.com/
what is priligy for https://ddapoxetine.com/
generic cefixime shipped to home https://ceefexime.co/
Precisely what I was looking for, thankyou for putting up.