போலீசாருடன் வாக்குவாதம்.... தாய், மகள் மீதான ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை சேத்துப்பட்டு அருகே காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

போலீசாருடன் வாக்குவாதம்.... தாய், மகள் மீதான ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  அவ்வழியாக வந்த காரில் அவசியமின்றி வெளியே வந்த பிரீத்தி ராஜன் என்ற இளம்பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த இளம்பெண்ணின் தாயும் வழக்கறிஞருமான தனுஜா ராஜன், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் காவல்துறையினரை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

இதுதொடர்பாக தனுஜா மற்றும் அவரது மகள் பிரீத்தி ஆகியோர் மீது, 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், உயர்நீதிமன்றத்தில் தாய் - மகள் இருவரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.