பண்டிகை கால சிறப்பு சலுகை.. சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு  

நாட்டு மக்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகையாக சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு பலனை, மாநில அரசுகள் மக்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் போன்ற சமையல் எண்ணெய் கச்சா வகைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக மத்திய அரசு சமீபத்தில் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று இவற்றிற்கான செஸ் கட்டணமும் 20 சதவீதத்தில் இருந்து 7. 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வரி குறைப்பின் பலன் நாட்டு மக்களை சென்று சேரும் வகையில்,  சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பை உடனடியாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சந்தையில் சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.