இப்படி செய்த டெட்டால்: மக்கள் சொல்வது என்ன?

பிரபல டெட்டால் அதன் லோகோவிற்கு பதில் கொரோனா முன்களப்பணியாளர்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து அவர்களை கவுரப்படுத்த முடிவுசெய்துள்ளது. 

இப்படி செய்த டெட்டால்: மக்கள் சொல்வது என்ன?

பிரபல டெட்டால் அதன் லோகோவிற்கு பதில் கொரோனா முன்களப்பணியாளர்களின் புகைப்படங்களை பிரிண்ட் செய்து அவர்களை கவுரப்படுத்த முடிவுசெய்துள்ளது. 

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலையால் முன்களப்பணியாளர்களான மருத்துவர்களும், காவல்துறையினரும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருகின்றனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக நுகர்பொருள் விற்பனையில் முன்னணி நிறுவனமான, ரெக்கிட் அதன் பிரபலமான பிராண்டான, டெட்டாலில் அதன் லோகோ படத்துக்கு பதிலாக, கொரொனா முன்களப்பணியாளர்களின் புகைப்படங்களை அச்சிடுகிறது.  தொடர்ந்து அந்த கொரோனா போராளியின் விவரம் மற்றும் அவர் ஆற்றிய சாதனைகள் குறித்தும் அச்சிடப்படும் என்றும் ரெக்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முதல் முறையாக, ‘டெட்டால்அதன் லோகோவை நீக்கிவிட்டு கொரோனா முன்களப்பணியாளர்களின் புகைப்படங்களை அச்சிடுவது குறிப்பிடத்தக்கது.