14 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழகம் முழுவதும் வீடு வீடாக டோக்கன் விநியோகம்...

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்களுக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. 

14 வகை மளிகை பொருட்கள் வழங்க  தமிழகம் முழுவதும்  வீடு வீடாக டோக்கன்  விநியோகம்...

கொரோனா 2-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாயுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதைதொடர்ந்து கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். மேலும் 15-ந் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

இதே போல் கோவை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களில் இந்த பணிகள் முடிவடையும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.