போஸ்டிங் கேட்டு வராதீங்க...  ஒட்டிய போஸ்டர் அமைச்சர் மா சுப்பிரமணியன்.. 

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலுவலகத்தின் முகப்பில் டிரான்ஸ்பர் கேட்டு தன்னை நேரில் அனுக வேண்டாம் என நோட்டீஸ் அடித்து ஒட்டிள்ளார்.

போஸ்டிங் கேட்டு வராதீங்க...  ஒட்டிய போஸ்டர் அமைச்சர் மா சுப்பிரமணியன்.. 

கடந்த மே மாதம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் அதிரடியாக நடந்து வருகிறது.

அது மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பில் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம் அமைச்சர்களின் செயல்பாடுகளும் வெளிப்படையான நடவடிக்கைகளாகவே உள்ளது.
அதாவது புதிதாக ஆட்சியமைத்த திமுகவிற்கு கொரோனா பெருந்தொற்றை கையாளுவது கடும் சவாலாகவே உள்ளது.

அதிலும் குறிப்பாக சுகாதாரத்துறை மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பொறுப்பிற்கு மா சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்றால், பெரும் பாதிப்பை தமிழ்நாடு சந்தித்தது. 

கடிமான இந்த சூழலை மா சுப்பிரமணியன் சிறப்பாக கையாள்வார் என்று நம்பிக்கையுடன் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பை அளித்தார். அதன்படியே ஆக்டிவ் ஆகசெயல்பட்டு வருகிறார். 

தடுப்பூசி கொள்முதல் ஆரம்பித்து,  முன்கள பணியாளர்களுக்காக செலவு செய்யப்படும் உணவுக்கான தொகைகையும் வெளிப்படையாக அறிவித்தார்.

இப்படி பல்வேறு விஷயங்களில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் மா சுப்பிரமணியன், அவரது அலுவலக வாயிலில் ஓட்டிய போஸ்டர் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது. 

முகத்தில் அறைந்த உண்மை

அதில், அலுவலகம் முன்பு உள்ள பதிவு அப்படியே, "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும் வெளிப்படையான கலந்தாய்வின் வாயிலாக நடைபெறுவதால் பணியிட மாறுதல் தொடர்பாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலகத்தை அணுக வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அமைச்சர் அலுவலகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவினை பார்த்த பலரும் இதேபோல் அனைத்து துறைகளும் இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டினார்கள்.