பெண்களை ஆபாச வீடியோக்கள் எடுத்து சிலர் மிரட்டினால் அஞ்ச வேண்டாம் - செளமியா அன்புமணி

பெண்களை ஆபாச வீடியோக்கள் எடுத்து சிலர் மிரட்டினால் அஞ்ச வேண்டாம் - செளமியா அன்புமணி

சென்னை:- பெண்களின் ஆரோக்கியம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை ராணி மேரி கல்லூரியின் முதல்வர் மகேஸ்வரி தலைமையில் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது.இதில் பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார் மேலும் இந்நிகழ்வில் காவல்துறை குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி காலியப்பன்,தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.

பெண்களின்  ஆரோக்கியம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தினை கல்லூரியின் முதல்வர் மற்றும் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்

.

பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேச்சு...

1965 முதல் 1968 வரை எனது தாயார் சமூகவியல் துறையை தேர்வு செய்து இதே ராணி மேரி கல்லூரியில் படிப்பை முடித்தவர்.பெண்களின் முக்கிய பிரச்சனை பிரசவ வலி 15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் வாகனங்கள் இல்லாத காரணத்தினாலும் இரவு நேரங்களில் பிரசவ வழி வந்ததும் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் சேர்க்க முடியாததாலும் பல பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 108 எனும் அவசர சிகிச்சை வாகனம் மூலம் 10 நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதித்து எதிர்கொள்ளும் வகையில் முன்னேறியுள்ளது இதற்கு காரணம் எனது கணவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்திய 108 அவசர வாகனம் திட்டம்.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

2000 ஆண்டில் ஒரு லட்சம் தாய்மார்களில் கிட்டத்தட்ட வாகனங்கள் இல்லாத காரணத்தினால் மட்டும் 370 பேர் உயிரிழந்தனர் ஆனால் 2023 ஆம் ஆண்டில் வருடத்திற்கு 27 பேர் மட்டுமே உயிர் இழக்கின்றனர்.மருத்துவமனை எங்கிருந்தாலும் 108 வாகனம் மூலம் அனுமதிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

பெண்களின் அடுத்த முக்கிய பிரச்சனை வறுமை பெண்களின் வறுமை காரணத்தினால் மட்டும் ஒரு சில நோய்களுக்கு பெரிய மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.குறிப்பாக பெண்கள் வாழ்நாளில் பாதி நாட்களை குடிநீர் எடுக்கவும் பாதி நாட்களை சுல்லி பொறுக்கி அடுப்பெரிக்கவுமே கலைகின்றனர் ( பெண்கள் வாழ்நாளில் பாதி நாட்களை நடந்தே கழிக்கின்றனர் )

குடும்பத்தில் உள்ள பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே குடும்பத்தில் உள்ள அனைவரும் செழிப்பாகவும் மகிழ்வாகவும் இருக்க முடியும்

காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர் நிகழ்ச்சிகளை அதிகளவில் அளிக்க வேண்டும் .பாலியல் தொந்தரவு பாதிப்பு ஏற்பட்ட பெண்களின் கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கு காவல்துறையோ அல்லது அரசு அதிகாரிகளாலும் உதவி செய்ய முடியும்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மகளிர்களுக்காக 13 அம்ச கோரிக்கை திட்டத்தை கொண்டு வந்தார் ஆனால் அது இன்றளவில் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்களில் தகுந்த தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான தீர்வும் வழங்கப்பட வேண்டும் 

மேலும் படிக்க |கலை மக்களுக்கானது : பிற்போக்கான கருத்துக்களை பரப்புவதற்கு முயற்சி - திருமா

கல்லூரி மாணவர்களையோ அல்லது பெண்களையோ ஆபாச வீடியோக்கள் எடுத்தும் அல்லது சித்தரித்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என எவரேனும் மிரட்டினால் அவர்களது மிரட்டலுக்கு யாரும் அஞ்ச வேண்டாம் அதனை தவிர்த்து அதனை எதிர்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் 10 முதல் 15 நாட்களில் மாறி விடும் அதற்காக யாரும் அதனை நம்பி ஏமாற வேண்டாம்.

யாரோ ஒருவரை நம்புவதை தவிர்த்து பெற்றோர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து எதனையும் மறைக்காமல் கூறுவதே நல்லது.உலகில் 46.9 சதவீதம் பெண்கள் உள்ளனர் ஆகவே பெண்கள் எதை நினைத்தும் கவலையோ வெட்கமும் கொள்ள தேவையில்லை என்றார்.