குட் நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்: தமிழக மக்கள் ஹேப்பி

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 34 மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் 13 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது, அரசு சாரா உறுப்பினர்களாக டாக்டர் குகானந்தம், டாக்டர் குழந்தைசாமி, சென்னை தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவன இயக்குநர் மனோஜ் முரேகர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர்.  

இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் காணொளி காட்சி வாயிலாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரவலை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பணிக்குழுவுடன் ஆலோசனை  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,  பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநர் செல்வம் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் காணொளி காட்சி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்ள இடைக்கால, குறுகிய கால, நீண்ட கால திட்டங்கள் வரையறுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில், கொரோனா பாதிப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது எனவும்,  34 மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி இல்லை எனவும் தெரிவித்தார்.