கோவை மண்டல பொறுப்பாளராகிறார் கனிமொழி... ஸ்டாலினின் அடுத்த அதிரடி பிளான்!!

மாநில தலைமைக்கு நம்பகமான ஒருவரை மேற்கு மண்டல பொறுப்பாளராக்க வேண்டும் என கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருவதால், ஸ்டாலினும் கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை மண்டல பொறுப்பாளராகிறார் கனிமொழி... ஸ்டாலினின் அடுத்த அதிரடி பிளான்!!
கொங்கு மண்டலத்தில் பத்துக்கு பத்து தொகுதியை அடித்து தூக்கியது அதிமுக. இந்த பகுதியில் திமுக பலவீனமான இருப்பதால் அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்த அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளன. காரணமாக தான் திமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமான முக்கிய நிர்வாகிகள் உள்ளடி பார்த்ததும், அவர்கள் வேலுமணியில் நிழலில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது கொரோனா கோரத்தாண்டவம் கோவையை வீரியத்துடன் தாக்குவதால், கொரோனா தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு இந்த உட்கட்சி பஞ்சாயத்துக்களை விசாரிக்கத் தொடங்குவார். 
 
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் தோல்விக்கு காரணமே சி.ஆர். ராமச்சந்திரன், சேனாதிபதி, பையா கிருஷ்ணன் தான் என தலைமைக்கு புகார்கள் சென்றிருக்கின்றன. பத்துக்கு பத்து தொகுதிகளையும் இழந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே ஏன் ராஜினாமா  செய்யவில்லை?
 
இவர்கள் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள், இவர்கள் மாவட்டப் பொறுப்புகளிலும், பகுதிப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். வேலுமணி ஜெயித்த தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவின் தேர்தல் வியூகம் பற்றி நடக்கும் கூட்டம், வேலுமணிக்கே வீடியோ கால் மூலம் லைவ் செய்யப்படுகிறது. குனியமுத்தூரில் இருக்கும் இந்த முக்கிய பொறுப்பாளர்களை வைத்துக் கொண்டால் திமுக எப்படி ஜெயிக்கும்? இங்கு இருக்கும் இந்த பொறுப்பாளர்கள் அறிவாலய அலுவலகத்தில் இருக்கும் சிலரின் தொடர்பில் இருந்துகொண்டு முரசொலியில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.
 
இப்படி அறிவாலயத்தில் தங்களுக்கு விருப்பமான நிர்வாகிகள் பட்டியல் ஒப்புதல் பெறப்பட்டு முரசொலியில் வந்துவிடுவதால் அந்த அறிவாலயப் புள்ளியின் அக்கவுன்ட்டில் லட்சங்களைக் கொட்டுகிறார்கள் இந்த புள்ளிகள். அறிவாலய பொறுப்பாளர்களின் அக்கவுண்டுகளை செக் பண்ணலே போதும் கோவை மாவட்ட யார் யார் என்று.  
 
இப்படி டீட்டெய்லாக கோவையில் இருந்து தகவல்கள் தலைமைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த விஷயத்தை இப்படியே விட்டால் கொங்குவை மறந்துவிடவேண்டியது தான். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு ஒரு மேலிடப்பொறுப்பாளரும், குறிப்பாக கோவை மாவட்டத்துக்கு ஒரு மேலிடப் பொறுப்பாளரும் நியமிக்கலாமா என கட்சி தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது. இதில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி பெயர் பொறுப்பாளர் பதவிக்கு கோவை திமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

 
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் ஜெயித்த பின் தூத்துக்குடி தொகுதியோடு நிர்க்கமால் ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவிலும் முக்கிய நபராக வளர்த்துள்ளார். தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என பலரும் கனிமொழியிடம் கட்சி விஷயங்களை கொண்டுசெல்கிறார்கள். உள்கட்சி பூசல்களை தீர்த்து தென் மாவட்டங்களில் திமுகவை வலிமையாக்கியதில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு உண்டு.
 
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொங்கு பகுதியை சேர்ந்தவர் அல்லாத அதேநேரம் மாநில தலைமைக்கு நம்பகமான ஒருவரை மேற்கு மண்டல பொறுப்பாளராக்க வேண்டும் என கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருவதால், ஸ்டாலினும் கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.