மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

நடப்பு கல்வியாண்டில் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்து ஆலோசனை நடத்திய பின்  அரசு அறிவிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 

அரசிடம் தற்போது போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், மருந்து விநியோகம் திருப்திகரமாக இருப்பதாகவும், கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று எல். முருகன், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசி அறிவித்தால் உடனடியாக வரவேற்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அரசு அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.