வாய்கிழிய பேசுறிங்களே நீங்க ரெண்டு பேரும் தடுப்பூசி போட்டிங்களா?

இதுவரை நீங்கள் இருவரும் கொரோனா தடுப்பூசி போடாதது ஏன் என காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் ஆகியோரிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வந்த நிலையில், ஊரடங்கு, கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இதுவரை தடுப்பூசி போட்டார்களா என கேள்வி எழுப்பினார். நாட்டின் மேல் நம்பிக்கை இல்லாமல் தடுப்பூசி போடாமல் இருக்கும் இவர்கள், தடுப்பூசி குறித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.