முதல்வருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்: மனோபாலா டிவிட்

முதல்வருக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்:  மனோபாலா டிவிட்

நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹாட்ஸ் ஆஃப்" ஸ்டாலின் என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் கவச உடையை அணிந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதேபோன்று பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதல்வர் ஸ்டாலின் செய்த முயற்சியை பார்த்த நடிகர் மனோபாலா "Hats off" என முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை ஷேர் செய்து பாராட்டி உள்ளார். இதேபோன்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.