இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகும் சி.வி சண்முகம்... தலையில் அடித்துக்கொள்ளும் தைலாபுரம்!!

விழுப்புரத்தில் படுதோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், இடைத்தேர்தலில் நின்று எம்.எல்ஏ வாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறாராம்!! அதெப்படி என கேட்டால், அவர் பாமகவின் தலையில் கைவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகும் சி.வி சண்முகம்...  தலையில் அடித்துக்கொள்ளும் தைலாபுரம்!!
அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தலை தூக்கிய பெரிய தலைகளில், முக்கியமானவர் சி.வி. சண்முகம். இரண்டுமுறை விழுப்புரம் தொகுதியில் ஜெயித்தவர். விழுப்புரத்தில் அமைச்சராக இருந்த பொன்முடியை தோற்கடித்து அதிமுகவின் கோட்டையாக மாற்றியவர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிலிருந்து சென்ற லட்சுமணன் டாக்டரிடம் அனாமத்தா வெற்றியை பறிகொடுத்தது இவரை டம்மியாகக்கிவிட்டது. ஆனாலும் விடுவாரா சிவி? பதவியிலேயே இருந்துவிட்டு சும்மா இருக்க முடியுமா? அதான் கடந்த சில நாட்களாக அவர் போட்டுள்ள மாஸ்டர் பிளானை கண்டு பாமக, அதிமுக அதிர்ந்துபோயுள்ளதாம்.
 
2011 தேர்தலுக்கு பின் விழுப்புரம் அதிமுகவை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவர். அதிலும் கடந்த 10 வருடமாக வன்னியர் சமூகத்தின் வாக்குகளை வைத்தே ஜெயித்தவர். இந்த முறையும் தன் சமூக மக்களை தன்னை கைவிட மாட்டார்கள் நம்பி இருந்தார். போதாக்குறைக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடும், பாமகவுடன் கூட்டணி, சொந்த செல்வாக்கு என பெருசா நம்பி களமிறங்கினார். என்னத்த செய்வது, இவரை எதிர்த்து போட்டியிட்டது டாக்டர் லட்சுமணன், ரிசல்ட் படுதோல்வி.

 
இது எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் செம்ம ஷாக் தான். வடமாவட்டங்களில் ராமதாஸையும், சி.வி.சண்முகத்தை மட்டுமே நம்பியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. கொங்கு மண்டலத்தில் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி போன்றவர்கள் இருப்பதால் வடக்கில் இருவரை மட்டுமே நம்பினார். என்னத்த செய்ய? ஆட்சி பறிபோனதற்கு வடமாவட்டங்களும் ஒரு காரணமாகவே அமைந்துவிட்டது.
 
இதில் கொடுமை என்னன்னா? சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றது தான் அதைவிட கொடுமை. வன்னியர் சமூகத்தின் மிக முக்கிய தலைவர் என்பதால், அதிமுகவில் மட்டுமல்லாமல் பாமகவிலும் இவருக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சி.வி.சண்முகம். அப்போது, இவருக்கு பக்கத்திலேயே மயிலம் தொகுதி பாமக எம்.எல்.ஏ சிவகுமார்.

 சிவக்குமார் ஜெயிச்சதுக்கு காரணமே சண்முகம் தான். இந்த நிகழ்வுக்கு பின் ஒரு ஆடியோ கசிந்துள்ளது அதிமுக மற்றும் பாமகவை பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். அதாவது, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமாரை ராஜினாமா செய்ய வைத்து  விட்டு, அந்த தொகுதியில் சி.வி.சண்முகமே ஸ்ட்ரைட்டாக களமிறங்கி ஜெயித்துவிட குறியாக இருக்கிறாராம்.
 
மேலும், அதிமுகவுக்கு வரும் சிவக்குமாருக்கு கட்சியில் பதவி கொடுப்பதாக பேசியிருக்கிறதாம் சி.வி.சண்முகம் தரப்பு, பெரிய அளவில் பேரம் நடத்தியதாக அந்த ஆடியோவில் வெளியாகி உள்ளதாம். கூட்டணி போட்ட ஒரே காரணத்துக்காக பாமக தலையிலேயே கைவைத்திருப்பது தைலாபுரத்தில் பூகம்பம் வெடித்துள்ளது.