பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்: 12 ஆண்டுகளுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்...

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் கத்திரிகோலை மருத்துவர்கள் வைத்து  தைத்த விவகாரத்தில்  மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள்: 12 ஆண்டுகளுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம்  அகற்றம்...

கடந்த 2008-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள வி,கே.ஆர் புரத்தை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேந்திரி என்பவர் பிரசவத்திற்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து  அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட போது, அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து  அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாஜி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த சம்பந்தம் தொடர்பாக  தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.