இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை... திமுகவை கடுமையாக விமர்சிக்கும் ராமதாஸ்!!

12524 கிராம ஊராட்சியில் அரசு நிதியை செலவிட்டு, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை... திமுகவை கடுமையாக விமர்சிக்கும் ராமதாஸ்!!

தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் 12524 கிராம ஊராட்சிகளுக்கும், அரசு நிதியை செலவிட்டு, தினகரன், தமிழ்முரசு, குங்குமம் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான பணத்தினை ஊராட்சி ஒன்றிய பொது நிதி கணக்கில் இருந்து வங்கி வரைவோலையாக அனுப்ப வேண்டும் எனவும் கிராம ஊராட்சிகள் மட்டுமல்லாமல், நகரப்பகுதிகளின் நூலகங்களுக்கும் இதே ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் பல ஆயிரம் சந்தாக்கள் கூடுதலாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அந்நூலகங்களில் அனைத்து நாளிதழ்களும் இடம்பெறும்படி தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்;  “தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும்,  அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது. 

நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.