செல்போன் நோண்டுவதே உங்க வேலையா? அப்போ இத படிங்க!

செல்போனை நோண்டிக்கொண்டே செல்வர்களுக்காக மூன்றாவது கண் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் நோண்டுவதே உங்க வேலையா? அப்போ இத படிங்க!

செல்போனை நோண்டிக்கொண்டே செல்வர்களுக்காக மூன்றாவது கண் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது செல்போன்கள் இல்லாத மனிதர்களே உலகில் இருக்கமாட்டார்கள் என சொல்லும் அளவிற்கு ஒருவர், இரண்டு போன்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் போதோ, வாகனத்தில் செல்லும் போதோ, அலுவலகத்தில் இருக்கும்போதோ என பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் செல்போன்களை நோண்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில் தென்கோரியாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் என்பவர், செல்போனை நோண்டிக்கொண்டே செல்வர்களுக்காக மூன்றாவது கண் கருவியை கண்டுபிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த நபர்கள் தங்களது நெற்றியில் மூன்றாவது கண் கருவியை பொருத்திவிட்டால், 2 மீட்டர் தூரத்திற்குள் எதிரே வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.