காங்கேயம் பகுதியில் களைகட்டும் கஞ்சா வியாபாரம் ...

காங்கேயம் பகுதியில் களைகட்டும் கஞ்சா வியாபாரம் ...

காங்கேயம் பகுதியில் களைகட்டும் கஞ்சா வியாபாரம் - சிறுவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோட்டைமேடு , இலங்கைகள் அகதிகள் முகாம் ஆகிய பகுதியிகளில் கஞ்சா விற்பனை ஜோராக நடைபெறுவதாகவும் இதனை சமூக ஆர்வலர் ஒருவர் சிறுவர்களை அனுப்பிவைத்து வாங்குவது போல் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கேயம் பகுதியியானது வளர்ந்து வரும் தொழில் நகரம் ஆகும் .இங்கு 500க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகளும் 1500க்கும் மேற்பட்ட தேங்காய் உடைக்கும் உலர்கலங்களும் 600க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் இயங்கி வருகின்றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஒரிசா, பிஹார், குஜராத், மத்தியபிரதேசம்,ஆகிய பகுதியிகளில் இருந்து ஏராளமான தொழிலார்களுக்கு வேலை குடுத்த நகரமாக திகழ்ந்து வருகின்றது . 

தற்போது காங்கேயம் நகரம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா வகைகள் 100 சதவிகித மளிகை கடைகளில் சுலபமாக கிடைத்து வருகின்றது.இந்த குட்கா பள்ளி முதல் கல்லூரி செல்லும் அனைத்து மாணவர்களும் பயன் படுத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு மற்றும் கரூர் சாலையில் உள்ள  இலங்கைகள் அகதிகள் முகாம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் ஜோராக  விற்பனை  நடைபெற்று வருகின்றது.

இதனை தடுக்கவேண்டிய காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் கடந்த 2 வருடங்களில் ஏராளமான காங்கேயம் பகுதி சிறுவர்களை போதை மறுவாழ்வு மையத்தில் பெற்றோர்களே சேர்த்துவருகின்றனர். தற்போது உரடங்கின் போது பல்வேறு இடங்களில் மது விற்பனையும் சகஜமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவைகளை நீண்ட நாட்களாக கவனித்து வந்த சில சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை என எண்ணி  இன்று சில சிறுவர்களை அனுப்பிவைத்து கஞ்சா  வாங்குவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் இது குறித்து புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர் பொதுமக்கள் .


காங்கேயம் பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்கவேண்டும் இல்லை எனில் போதைக்கு அடிமையானாள் நாம் பள்ளிக்கூடத்தில் சேர்த்த முடியாது போதை மறுவாழ்வு மையத்தில் தான் சேர்த்தமுடியும் என்பதை மனதில் வைத்து செயல்படவேண்டும் என்கின்றனர்,சமூக ஆர்வலர்கள்.

மேலும் நீண்ட நாட்களாக பணியிடை மாறாமல் இருக்கும் ஒரு சில காவல் துறையினரின் ஆசியுடன் காங்கேயத்தில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கஞ்சா விற்பவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா வாங்கி வருகின்றனர் என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர்.

மேலும் கஞ்சா கிடைக்காத போது இருசக்கர வாகனம் பஞ்சர் ஓட்ட பயன்படும் சொல்யூஷன், பெபிகால் போன்ற பொருட்களை வைத்து தண்ணீர் பாக்கெட்டை சிறிதாக கிழித்து அதில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு  சொல்யூஷன் அல்லது பெபிகால் ஊற்றி உறிஞ்சி ஊதுவதுடன் போதை தலைக்கேறுகின்றது என்கின்றனர்.