ஆஸ்கர் விருது வழங்கும் விழா எப்போது?

ஆஸ்கர் விருது வழங்கும் விழா எப்போது?

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் பார்க்கப்படுகிறது. இதனை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த விழாவானது திரைத்துறையில் பல்வேறு பிரிவை சார்ந்தவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்றும் ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.