இந்தியா

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூபாய் 2,000 அபராதம் -அதிகாரிகள் அதிரடி ;

டெல்லியில் மாஸ்க் அணியாதவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வீசத் தொடங்கி இருப்பதாக மாநில அரசு அறிவித்தது. நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அங்கு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டெல்லி – நொய்டா சாலையில் வாகன ஓட்டிகள் மாஸ்க் அணிந்து உள்ளனரா என்று ஆய்வு செய்யும் அதிகாரிகள், மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button