சினிமாசெய்திகள்தமிழ்நாடு

சினிமாவுக்கு தன்னை அறிமுகம் செய்து வைத்த எஸ்பிபி உடலுக்கு கூட அஜித் அஞ்சலி செலுத்த வராதது ஏன்?

நடிகர் அஜித் எஸ்பிபிக்கு சிறுவயதில் இருந்தே நெருக்கமானவர்என்பது திரையுலகம் நன்கு அறிந்த செய்தி

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு நெருக்கமான நடிகர்களில் ஒருவரான அஜித், உடலுக்கு அஞ்சலி செலுத்த வராததோடு, இரங்கல் அறிக்கை கூட வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தும், எஸ்.பி.பி.யின் மகனான சரணும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அஜித் விளம்பரங்களில் நடித்து வந்த போது சென்டிமென்ட்டுக்காக சரணின் உடைகளையும்,ஷூவையும் அணிந்து கொள்வார் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் எஸ்.பி.பி. தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அஜித் தானாவே கடுமையாக உழைத்து, எந்த பின்புலமும், பரிந்துரையும் இல்லாமல் சினிமாவில் சாதித்து காட்டியதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது ரசிகர்களை தொடர்ந்து இதனையே கூறி வருகின்றனர். ஆனால் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பி பாலசுப்ரமணியம், அஜித்தை தான் தான் முதன் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகம் செய்ததாக கூறியது, அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரிடம் அஜித்தை தான் அறிமுகம் செய்து வைத்ததாக அந்த பேட்டியில், எஸ்பி பாலசுப்ரமணியம் குறிப்பிட்டிருந்தார். அஜித் நடித்த உல்லாசம் படத்திலும் எஸ்.பி.பி. நடித்திருந்தார். அஜித் நடித்த படங்களில் இடம்பெற்ற பல ஹிட் பாடல்களையும் எஸ்.பி.பி. பாடியுள்ளார். பொதுவாக அஜித் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார் என சொல்லப்பட்டாலும், சிறுவயதில் இருந்தே நல்ல உறவு முறையில் இருந்த, தான் சினிமாவில் அறிமுகமாக காரணமான எஸ்.பி.பியின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ளாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரம் எஸ்பிபி குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அஜித் தனது இரங்கலை தெரிவித்தாரா என தெரியவில்லை. அதே நேரம் அதுபோன்ற தகவலும் கூட இதுவரை வெளிவரவில்லை.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button