இந்தியாகவர் ஸ்டோரி

இந்தியாவில் உருவாகும் புதிய மதம்.! மாநில சட்டமன்றத்தில் புதிய மதம் குறித்த மசோதா தாக்கல்.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் பழங்குடிகளை தனி மதமாக அறிவிக்கும் மசோதா ஒன்றை அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது மாநிலத்தில் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி ஆந்திர அரசாங்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பழங்குடி மக்களுக்கு தனி அடையாளம் அளிக்கும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதற்கு பழங்குடிகள் அமைப்பு சார்பில் ஆந்திர அரசுக்கு நன்றியும் தெரிவிக்க பட்டிருந்தது.

அதை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் அரசும் பழங்குடி ,மக்களை தனி மதமாக அறிவிக்கும் சட்டமசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அம்மாநிலத்தில் பழங்குடி மக்களை ‘சால்னா’ என்ற மத அடையாளத்தின் கீழ் இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ‘சால்னா மதத்தை’ தனி மதமாக அங்கீகரிக்கப் படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அந்த தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இப்போது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே பழங்குடி மக்களை தனி மதமாக அங்கீகரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளது. சட்டமன்றத்தில் அவர்கள் கூட்டணிக்கு போதுமான உறுப்பினர்கள் இருக்கின்ற காரணத்தால் இந்த மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அது நிறைவேற்றப்பட்டால் இந்தியா முழுக்க பழங்குடி மக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்க கோரிக்கை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 8%கும் மேல் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் ஹிந்து,கிறிஸ்தவம் ஆகிய மதங்களில் தங்கள் பெயர்களை இணைத்து கொண்டுள்ளனர். ஒருவேளை பழங்குடி மதம் தனியாக கொண்டுவந்தால் ஹிந்து,கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் பழங்குடிகள் தங்களை பழங்குடி மதத்தில் இணைத்துகொள்ள அதிக வாய்ப்பு உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button