மருத்துவம்

பிரசவத்திற்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்…

தாயின் ஆரோக்கியமே குழந்தையின் வளர்ச்சி என்பதை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்...

பெண்கள் எப்படி கர்ப்பகால சமயங்களில் தங்கள் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்களோ, அதேஅளவு அக்கறை பிரவசத்திற்கு பின்னான காலக்கட்டத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக பிரசவ காலத்தின் போது அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட அதிக சத்துள்ள உணவை உட்கொள்ளவேண்டும். மேலும் தினமும் உணவில் கீரைகள், பேரீச்சம் பழம், கேழ்விரகு உள்ளிட்டவற்றை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைக்கு முதல் சில மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே உணவு என்பதால், அதற்கும் தாய்மார்கள் தனிக்கவனம் கொண்டு புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு எடை கூடுவது என்பது இயல்பான ஒன்று தான். மீண்டும் பழைய உடல் அமைப்பை கொண்டு வர மருத்துவர் உதவியுடன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதிக இரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி, வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

குறிப்பாக கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான அளவு ஓய்வு எடுப்பதோடு, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button