மருத்துவம்

கொரோனா குணமடைந்தாலும் அதன் பாதிப்பு நீடிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் அதனுடைய பாதிப்பு நீண்ட நாட்கள் இருக்கும் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துவிட்டாலும் அடுத்த சில மாதங்கள் வரை சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் தொடர்வதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனில் ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த 110 பேருக்கு உடல் சோர்வு, உடல் வலி போன்ற பின்விளைவுகள் 3 மாதங்களுக்கு மேலாக நீடித்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய்தொற்றிலிருந்து மீண்டாலும் ஒருவரின் உடல்நிலையை பொறுத்து மாரடைப்பு, பக்கவாதம், இருதய பாதிப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கூட இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

6 Comments

  1. Hey there would you mind letting me know which web host you’re using? I’ve loaded your blog in 3 completely different web browsers and I must say this blog loads a lot faster then most. Can you suggest a good hosting provider at a honest price? Kudos, I appreciate it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button