கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மது அருந்தக் கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மது அருந்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு 68 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆய்வு செய்தார்.
அந்த தடுப்பூசிகளை 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவிசீல்டு தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்படும் என்றும், முதல் டோஸ்-க்கும், இரண்டாவது டோஸ்-க்கும் இடையிலான இடைவெளி 28 நாட்கள் என்றும் கூறினார். தடுப்பு மருந்து செலுத்திய 42 நாட்களுக்குப் பிறகு தான், நோயெதிர்ப்பு சக்தி உருவாகும் என்றும் அவர் கூறினார். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், மது அருந்தக் கூடாது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சமூக வலைகளில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக தகவல் பரப்புவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.