சுற்றுலா - ரயில்கள்

இனி எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்….!

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ.120 வரை கேஷ்பேக் பெறலாம்...

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வகித்து வருகிறது. இதற்கான பிரத்யேக செயலியும் உள்ளன. இந்நிலையில் இவ்வமைப்புடன் அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது. இதன்மூலம் இனி அமேசான் தளங்களின் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

முதற்கட்டமாக அமேசான் ஆண்ட்ராய்டு செயலியிலும், மொபைல் போனுக்காக அமேசான் இணையதளத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐபோன் இயங்குதளங்களிலும் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி.யில் வழங்கப்படும் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்வது, ரயில்களின் விவரங்கள் அறிவது என அத்தனை சேவைகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அமேசான் பே மற்றும் இதர பிற இணையதள பணப்பரிவர்த்தனை முறை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும் முதல்முறையாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ. 100 வரை கேஷ்பேக் பெறலாம் என அமேசான் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button