Uncategorized

வழக்கு செலவுக்கு மனைவியின் நகையை விற்ற அனில் அம்பானி – மிகப்பெரிய கோடீஸ்வரரின் இன்றைய பரிதாப நிலை

இந்திய வங்கிகளில் அதிகம் கடன் வாங்கி அதை கட்டாதவர் யார் என்று கேட்டால் அனைவரும் கிங் பிஷர் விஜய் மல்லையாவை தான் சொல்லுவோம். ஆனால் அவரை விட 10 மடங்கு அதிகம் கடன் வாங்கி அதை கட்டாதவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பலருக்கு ஆச்சரியத்தையே தரும். ஆம் அவர் தான் அனில் அம்பானி. ஜியோ நிறுவன முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் இந்த அனில் அம்பானி.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான அம்பானி மறைந்த பின் அவரது சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு அவரது இரு மகன்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. அப்போதே குறிப்பிட்ட ஆண்டு வரை அடுத்தவர் தொழிலில் மற்றவர் நுழையக்கூடாது என்றும் கட்டுப்பாடு இடப்பட்டது. அப்படி பிரித்துக்கொடுக்கப்பட்ட சொத்துக்களை வைத்து மூத்தவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர் வரிசையில் இடம்பெற அவரது தம்பியான அனில் அம்பானியின் நிலையோ பரிதாபமான நிலையில் இருக்கிறது.

அண்ணன் முகேஷ் கைவைத்த தொழில் எல்லாம் லாபமாக மாற தம்பி அனில் கைவைத்த தொழில் எல்லாம் நஷ்டத்தில் செல்ல ஒருகாலத்தில் இந்திய பணக்காரராக இருந்த அனில் அம்பானி இப்போது இந்தியாவில் அதிக கடன் காரர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். இந்திய வங்கிகளில் அவர் வாங்கி திரும்ப கட்ட முடியாத கடன் தற்போது 86,188 கோடியாக அதிகரித்துள்ளது. இது தவிர அவர் செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் நிலுவை கட்டணமான 28,837 கோடி ரூபாயை சேர்த்தால் அவரது மொத்த கடன் 1,15,025 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய் மல்லையாவின் கடனை விட 12 மடங்கு அதிகமாகும். விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடியையும் நீரவ் மோடி 7,407 கோடியையும் கடனாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்னஸ் இன்சைடர் கொடுத்த தகவலில் படி அனில் அம்பானியின் நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனியூகேஷன்ஸ் 49,193 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் டெலிகாம் 24,306.27 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இன்பராடெல் 12,687.65 கோடி ரூபாய் என மொத்தம் 86,188 கோடி ரூபாய் கடனை அனில் அம்பானி இந்திய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அனில் அம்பானியின் வங்கி கணக்குகளை மோசடி செய்யும் கணக்குகளாக அறிவித்துள்ளன. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று வங்கிகள் அளித்த புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகிய அனில் அம்பானி தனது வங்கிக்கணக்கில் வெறும் 20.8 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் தனது அம்மாவிற்கு 500 கோடியும் தனது மகனுக்கு 310 கோடியும் கடனாக கொடுக்கவேண்டி இருப்பதாகவும், தனது வழக்கில் செலவுகளுக்கு தனது மனைவியின் நகைகளை விற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button