thirumavalavan and vanniyarsu 
தமிழ்நாடு

விசிக -வுக்கு 25 சீட் வேணும் ..! “ஒரே போடாக போட்ட வன்னியரசு..” - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்…!?

இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்....

Saleth stephi graph

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி  அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குழப்பத்தில் அதிமுக 

உண்மையில் அதிமுகவும் எடப்பாடியும் விரும்பிய கூட்டணி விஜய்தான்.  வேறு வழியின்றியே  பாஜக -உடன் அதிமுக இணைந்துள்ளது. ஆனால்  கள நிலவரமும் அதையேதான் சொல்கிறது, என்பதுதான் ஆச்சர்யமே. பல அதிமுக தொண்டர்கள் பாஜக நிர்வாகிகளுடன்  இணைந்து வேலை பார்க்க மறுப்பதாக பல தகவல்கள் வெளியாகின்றன. ஏன் எட்டப்படியே கூட்டணி கட்சியான பாஜக நடத்தும் கூட்டங்களுக்கு செல்லாமல் தவிர்த்து வருகிறார். சமீபத்தில் நடந்த முருகர் மாநாட்டில் கூட எடப்பாடி கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக -வை நெருக்கும் கூட்டணி கட்சிகள்!

திமுக -வின் பலமே அதன் கூட்டணி கட்சிகள்தான். வருகிற தேர்தல் இதுவரை நாம் காணாத  அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை, எனவேதான் கூட்டணி கட்சிகள் இம்முறை அதிக சீட்டுகள் கோருவோம் என சொல்லி வருகின்றன. ஏற்கனவே சிபிஎம் கட்சியின் செயலாளர் சண்முகன் நாங்கள் நிச்சயம் அதிக இடங்களை கோருவோம் என பேசியிருந்தார்.

விசிக தலைவர் திருமாவளவனும் “நாங்கள் இம்முறை நிச்சயம் அதிக இடங்களை  கோருவோம். ஒரு வேளை எங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாவிட்டாலும், கூட்டணியில் தொடர்வோம்” என்ற தந்து நிலைப்பாட்டை உறுதிபட கூறியிருந்தார்.  இந்த நிலையில் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு “2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப் ​போன்ற கடைநிலை தொண்டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்” என கருத்துத் தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் மிகப்பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நெருக்கடியில் திமுக 

இந்நிலையில் திமுக ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டுள்ளது என்ற சொல்ல  வேண்டும். ஏனெனில் அதன் தலைமுறைகடந்த ஊழல் மற்றும் குடும்ப  அரசியலாலும், அவர்களுக்கு ஒருமித்த ஆதரவு இல்லை. பாஜக -வை எதிர்க்க மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் ஒரு வலுவான பின்னணி இல்லை, எனவே திமுக -வும் அதன் கூட்டணிகளும்  ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலையில் உள்ளனர். ஒரு காதசிக்கு அதிக செட் கொடுத்துவிட்டால் மற்ற கட்சிகளும் அதிக இடங்களை கோருவர். அத்தனையும் ஸ்டாலின் சமாளிக்க வேண்டும். என்ன செய்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்