தமிழ்நாடு

”வியாபாரிகள் வணிகர் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்” - ராகம் செளந்தரபாண்டியன்!

Tamil Selvi Selvakumar

வியாபாரிகள் அனைவரும் தங்களது கைபேசியில் வணிகர் செயலியை பதிவிறக்கும் செய்து கொள்ளுமாறு நாடார் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடந்த 12ஆம் தேதி தஞ்சையை சேர்ந்த வியாபாரி செந்தில்வேலிடம் கஞ்சா வாங்குவதற்காக மாமூல் கேட்டு சிலர் அவரை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வணிகர் செயலி மற்றும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யாத வியாபாரிகள் உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும், இது காவல்துறைக்கும் வியாபாரிகளுக்கும் இடையே இருக்கும் உறவை பலப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.