பொழுதுபோக்கு

பாலா படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்… ஆச்சரியத்தில் திரையுலகினர்…

இயக்குநர் பாலாவின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்றைய திரையுலகில் தவிர்க்க முடியாத நபராக திகழ்பவர் இயக்குநர் பாலா. கடந்த 21 ஆண்டுகளில் இவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, நாச்சியார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக இவர் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ‘வர்மா’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் சில பிரச்சனைகளால் படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளிவந்தது. இந்நிலையில் பாலாவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஹீரோவாக அதர்வா, ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கவுள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் திரையுலகினர், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

45 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button