இந்தியா

ராணுவ கேன்டீன்களில் இறக்குமதி பொருள்கள் விற்பனைக்கு தடை;

ராணுவ கேன்டீன்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராணுவத்தின் சார்பில் மிலிட்டரி கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தள்ளுபடி விலையில் பொருள்கள் விற்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவது சுமார் 4 ஆயிரம் ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருள்கள் இனி ராணுவ கேன்டீன்களில் விற்பனை செய்யபட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button