இந்தியா

டிஆர்பி முறைகேட்டுக்காக 40 லட்சம் ரூபாயை அர்னாப் கோஸ்வாமி லஞ்சமாக கொடுத்தார்.!பார்க் சிஇஓ ஒப்புதல் வாக்குமூலம்.!

டிஆர்பி முறைகேட்டில் சிக்கிய ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனக்கு 40 லட்சம் ரூபாய் அளவு லஞ்சம் கொடுத்திருப்பதாக டிஆர்பியை வெளியிடும் பார்க் ஆணையத்தின் முன்னாள் சிஇஓ-வான பர்த்தோ தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்குக் கைப்பட எழுதிக்கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

டைம்ஸ் நவ் சேனலின் முதன்மை செய்தி ஆசிரியராக விளங்கிய அர்னாப் கோஸ்வாமி அதிலிருந்து விலகி பாஜகவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் என்பவருடன் இணைந்து ரிபப்ளிக் டிவி என்ற செய்தி சேனலை தொடங்கினார். சேனல் ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே டிஆர்பியில் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ரிபப்ளிக் டிவி. இதன்மூலம் பெரும் விளம்பர வாய்ப்புகள் ரிபப்ளிக் டிவியை தேடி வந்தது. இந்நிலையில் தான் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் டிஆர்பிக்காக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை மும்பை காவல்துறை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து மும்பை காவல்துறை வெளியிட்ட குற்றப்பத்திரிகையில் பார்க் ஆணையத்தின் முன்னாள் சிஇஓ-வான பர்த்தோ தாஸ்குப்தாவுக்கு டிஆர்பியில் முறைகேடு செய்ய பல்வேறு தருணங்களில் ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

3,600 பக்கங்கள் கொண்டு இந்த குற்றப்பத்திரிகையை மும்பை காவல்துறை ஜனவரி 11ம் நாள் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் பார்க் ஊழியர்கள், கேபிள் டிவி வைத்திருப்பவர்கள் என பலரின் வாக்குமூலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த குற்றப்பத்திரிகையில் பார்க் ஆணையத்தின் முன்னாள் சிஇஓ-வான பர்த்தோ தாஸ்குப்தாவின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் 2013 இல் தான் பார்க் ஆணைய சிஇஓ-வாக ஆகும் முன்பே அர்னாப் கோஸ்வாமியுடன் நட்பில் இருந்ததாகவும், ரிபப்ளிக் டிவி ஆரம்பிக்கும் முன்பே டிஆர்பி முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசியுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 2017ம் ஆண்டில் 20 லட்சம் ரூபாயும் 2018 மற்றும் 2019ம் ஆண்டில் தலா 10 லட்சம் ரூபாயும் தனக்கு அர்னாப் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். நானும் அரணாப்பும் இணைந்தே ரிபப்ளிக் டிவியை முதல் இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தவிர தான் குடும்பத்தோடு பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு செல்வதற்காக அர்னாப் தனக்கு 6000 டாலர்கள் கொடுத்தார் என்றும் 2019-லும் இதே போன்று ஸ்வீடன், டென்மார்க் சுற்றுலாவுக்கு 6000 டாலர்கள் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார். இதை இந்திய மதிப்பில் பார்த்தால் 8 லட்சத்து 50 ரூபாய் அளவு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button