சினிமாசெய்திகள்

இவர்களின் சிரிப்பு ஒன்றே போதும் :அருண் விஜய் மனம் உருகி பதிவு

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை கதாநாயகிகளை கூட எளிதில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.ஆனால் கதாநாயகர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்டி விடமாட்டார்கள்.அதிலும் தந்தை ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரு உச்சத்தை தொட்டவராக இருந்து, அவரின் மகன் நடிக்க வந்தால் ஆதரவை விட எதிர்ப்புகள் தான் அதிகமாக இருக்கும்.

ஆனால் அப்படி வந்த பல நடிகர்கள் தங்களின் திறமையினால் மட்டுமே புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர்.அந்த வகையில் நடிகர் அருண் விஜய் 1995 ஆம் ஆண்டு ‘முறை மாப்பிள்ளை’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து கண்ணால் பேசவா,தவம், மாஞ்சா வேலு என பல படங்கள் நடித்துள்ளார்.ஆனால் எந்த ஒரு திரைப்படமும் அவருக்கு பேசும் படி அமையவில்லை.

இதனை தொடர்ந்து‘என்னை அறிந்தால் ‘ திரைப்படத்தில் அவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவரின் திரைத்துறை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.’ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு’ என்று சொல்வார்களே அது போல தான் நடிகர் அருண் விஜயும். இத்தனை வருடமாக காத்திருந்த பெயரும் ,புகழும் இவருக்கு இந்த ஒரு படத்தில் கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும். பின்பு தொடர்ந்து குற்றம் 23, தடம், மஃபியா என ஹிட் படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நவம்பர் 19 ஆம் தேதி ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘அவர்களின் புன்னகை மற்றும் வாழ்த்துக்களுடன் எனது பிறந்தநாளை தொடங்க விரும்புகிறேன்.என் மனசு முழுமையாக இருக்கிறது.உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி ‘என்று கூறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button