விஜய் பட பாடலுக்கு ஆட்டம் போடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் – வைரல் வீடியோ

நடிகர் விஜய் படத்தின் பாடலுக்கு இந்திய வீரர்கள் அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. கொரோனாவால் படம் ரிலீஸ் தாமதமாக கொரோனா ஊரடங்கில் தொலைக்காட்சிகள் ரிபீட் மோடில் ஒளிபரப்பின.
இதனால் மொழி புரியாதவர்கள் கூட பாடலின் இசையைக் கேட்டு ஆட்டம் போட்டு அதன் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் சமீபத்தில் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய சம்பவம் வைரலாகியது.
இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா நடனம் ஆடிய வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#VaathiComing is back, this time with @imkuldeep18, @ashwinravi99 and @hardikpandya7🕺🎶#KKR #Cricket pic.twitter.com/RoeYCKC7tz
— KolkataKnightRiders (@KKRiders) February 20, 2021