பொழுதுபோக்கு

அட்லியுடன் 4வது முறையாக இணைகிறாரா விஜய்? – டுவிட்டரில் ட்ரெண்டாகும் தகவல்…

இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்குப் பின் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 65வது படத்தில் நடிக்க உள்ளார். இதன்பின் விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யின் 66வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கிய நிலையில், இந்த தகவல் உண்மையானால் 4வது முறையாக இந்த கூட்டணி இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரும் இதில் அடிபடுகிறது. இதனை #Thalapathy66 என்ற ஹேஸ்டேக்கில் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Articles

2 Comments

  1. Excellent read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch as I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch! “We have two ears and only one tongue in order that we may hear more and speak less.” by Laertius Diogenes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button