வைரல்

பாஜகவினருக்கு கல்லடி – ஊர்வலத்தை தடுத்து, நோட்டீஸை கிழித்து விரட்டியடித்த 2 பேர்!

போலீசார் தக்க நேரத்தில் வந்ததால், பெரும் தாக்குதல் தடுத்து நிறுத்தம்!

புதுச்சேரியில் பாஜகவினரை சுற்றி வளைத்த அப்பகுதி இளைஞர்கள் 2 பேர்,  பாஜகவினரின் பிரச்சார வாகனத்திலும் ஏறி தாக்குதல் நடத்த முயன்றதோடு, பாஜகவினரின் நோட்டீஸ்களையும் கிழித்தெறிந்தனர். தக்க நேரத்தில் வந்த காவல்துறை, பாஜகவினரை பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பெரியபேட் பகுதியில் பாஜகவினர் சுமார் 50 பேர் மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் 2 பேர், பாஜகவினரிடம் இருந்து, நோட்டீஸ்களை வாங்கி, அவர்கள் கண்முன்னே கிழித்தெறிந்தனர். மேலும், வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகியை, பிரச்சாரத்தை நிறுத்தச் சொல்லி, அந்த வாகனத்தில் ஏறி அடிக்க முயன்றனர்.

உடனடியாக போலீசார் அங்கு வந்து, பிரச்னையில் தலையிட்டு, அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து போகச் சொல்லி எச்சரித்தனர். சற்று தூரம் சென்ற பிறகு, அவர்கள் கற்களை எடுத்து பாஜகவினர் மீது வீசியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் எதிர்ப்பால் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாஜகவினர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Related Articles

One Comment

  1. Great ?V I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it at all. Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, website theme . a tones way for your client to communicate. Excellent task..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button