Arun Kumar A

8 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து…

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் புத்தாண்டு நன்னாளில், தமிழக மக்களுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தில் அமைதி, வளம், மகிழ்ச்சி பெருகட்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியம், கலாசாரத்தின் அடையாளமாக தமிழ் புத்தாண்டு திகழ்வதாக குறிப்பிட்டுள்ள...

இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…

கொரோனா தடுப்பூசி திருவிழா மூலம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பூசி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஒரேநாளில்...

பெரியார் மற்றும் அம்பேத்கர் ஓவியங்கள் மீது சாணி கரைசல் தெளித்த சம்பவத்தால் பரபரப்பு…

கிருஷ்ணகிரி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்குள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் ஓவியங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டூர் பகுதியில் அம்பேத்கர் காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு அம்பேத்கர் பிறந்தநாள் அன்று மரியாதை செய்வது...

சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசனை…

கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 10 மற்றும் 12 வகுப்புக்கான சிபிஎஸ்சி பொது தேர்வுகள் வரும் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தேர்வை ஒத்தி வைப்பது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மற்றும்...

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டம்…

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்...

10 லட்சம் ரூபாய்க்கு தொழில் அதிபரிடம் 10 வயது சிறுமி விற்பனை: ஆடியோ வெளியாகி பரபரப்பு…

சேலத்தில் தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவர் தனது 10 வயது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு...

5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்…

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய் போலீசார், பெண் உட்பட 3 பேரை கைகது செய்துள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலெட்சுமி என்பவர் தொண்டு நிறுவனம் நடத்திவருவதாக கூறப்படுகிறது. இவரிடம் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பண மதிப்பிழப்பு...

பூரண குணமடைந்து பூரண குணமடைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி, கடந்த...

பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

தமிழகத்தில் மே 3-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு...

About Me

204 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

சென்னையில் கொடூரம்…‘அண்ணியை’ கொன்று பழிக்குப் பழி தீர்த்த மைத்துனர்கள்…

அண்ணனை பிரிந்து தனியே வசித்து வந்த அண்ணியை நடுவீதிக்கு வரவழைத்து, மைத்துனர்கள் 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்த குலை நடுங்கும் கொடூர சம்பவம்...
- Advertisement -