சென்னைதமிழ்நாடு

நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசப்பட்டதால் அதிகாரிகள் திகைப்பு ;

சென்னை விமானநிலையத்தில் தொண்டர்களை நோக்கி கையசைத்து சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மர்ம நபர் ஒருவர் பதாகையை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அவர் தொண்டர்களின் அன்பை பெறும் விதமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் சாலையில் நடந்தே வந்தார்,

அப்போது அமித்ஷாவை தொண்டர்கள் கரகோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில் நின்ற ஆசாமி ஒருவர் அமித்ஷா மீது தனது கையில் வைத்து இருந்த பதாகையை தூக்கி வீசி எறிந்தார்.

இதனால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது…

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button