கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.!

பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தான் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக அணுகியதால் அந்த மாணவியின் குடும்பத்தினர் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ வை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இருக்கும் சிராகான் தொகுதியின் எம்எல்ஏ வாக இரண்டு முறை இருந்தவர் மாயா சங்கர் பதக், இவர் அங்கு ஒரு பொறியியல் கல்லூரியை நடத்திவருகிறார். அப்போது அங்கு படித்த ஒரு மாணவியிடம் இவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவர்கள் ஆவேசமடைந்து மாயா சங்கர் பதக்கிடம் வந்து இந்த சம்பவம் பற்றி கேள்வியெழுப்பியுள்ளனர்.
அப்போது ஆவேசமடைந்த அந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மாயா சங்கர் பதக்கை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலின் பின் அவர் அந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆகவே அந்த மாணவியின் குடும்பத்தினர் இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரிடம் புகார் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த அந்த மாணவியின் குடும்பத்தினர் இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.
இந்த வீடியோ வெளியானதும் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ மாயா சங்கர் பதக் தன் பெயரை கெடுக்க சிலர் இது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அந்த மாணவியிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளிவந்தும் இதுபற்றி இன்னும் உத்தரபிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Trigger warning: Violence, abusive content
Maya Shankar Pathak, a former 2-time MLA who now runs an engineering college in Varanasi being thrashed by locals for allegedly sexually harassing a student. @Uppolice pic.twitter.com/UwbfMFZ7Sl
— Piyush Rai (@Benarasiyaa) January 10, 2021