தமிழ்நாடு

பிரைட் ரைசுக்கு காசு கேட்டதால், மதக் கலவரம் செய்வேன் என மிரட்டிய பாஜக பிரமுகர் – வீடியோ வைரல்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கடை ஒன்றில் இலவசமாக சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்அவுஸ் பகுதியில் சேபு அபு பக்கர் என்பவர் MSM மலேசியன் பரோட்டா என்ற பாஸ்ஃபுட் உணவகத்தை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த 3 பேர் சிக்கன் ரைஸ் வாங்கி விட்டு காசு கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் தாங்கள் 3 பேரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள். எங்களிடமே பணம் கேட்கிறாயா என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிபோதையில் உள்ள அந்த 3 பேரில் ஒருவர் கடை உரிமையாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜக நிர்வாகிகளை அங்கிருந்து செல்லுமாறும், எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர்.

அதனை கேட்காமல் அந்த நபர், தான் பாஜகவின் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் எனறும், நாளை முதல் அபுபக்கர் கடையை எப்படி நடத்துகிறார் என்றும் பார்ப்போம் என மிரட்டும் தொனியில் பேசுகிறார். தன்னுடன் உள்ள இருவர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தான் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் அமித்ஷாவின் பிஏவுக்கு போன் செய்வேன் எனவும், 1000 பேர் ரெடியா இருக்காங்க, மதக் கலவரம் பண்ணிடுவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இப்படி வெளிப்படையாக மிரட்டும் நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே காவல்நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர், பாஜக பிரமுகரை கைது செய்யக் கோரி புகாரும் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறை,  2 பேரை கைது செய்ததோடு,  ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Articles

12 Comments

 1. I do not even know the way I ended up here, however I thought this
  publish used to be great. I do not know who you’re however certainly you’re going to a well-known blogger
  if you happen to aren’t already. Cheers!

 2. Hi I am so happy I found your blog, I really found you by mistake, while I was looking on Bing for something
  else, Nonetheless I am here now and would just like to
  say cheers for a marvelous post and a all round entertaining blog (I also love the theme/design), I don’t have time to read it all at
  the moment but I have book-marked it and also included
  your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the fantastic
  work.

 3. I don’t know if it’s just me or if everyone else experiencing problems with your site.
  It looks like some of the text within your posts are running off the
  screen. Can somebody else please provide feedback and let me
  know if this is happening to them too? This might be a issue with my internet browser because
  I’ve had this happen previously. Cheers

 4. I was wondering if you ever thought of changing the layout of your
  website? Its very well written; I love what youve got to say.
  But maybe you could a little more in the way of content so people
  could connect with it better. Youve got an awful lot of text for only having one or 2 pictures.

  Maybe you could space it out better?

 5. I am curious to find out what blog platform you happen to be working with?
  I’m experiencing some small security problems with my latest blog and I
  would like to find something more secure. Do you have any
  recommendations?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button