இந்தியா
போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட பாஜக இளைஞரணி பெண் தலைவர்

மேற்கு வங்கத்தில் போதை பொருளை வைத்திருந்ததாக பாஜக இளைஞரணி பெண் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக யுவ மோர்ச்சா இளைஞரணி தலைவராக செயல்படுபவர் பமீலா கோஸ்வாமி. இந்த நிலையில் கோக்கைன் என்னும் போதை பொருளை வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவின் நியூ அலிபூர் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது சோதனை செய்த போலீசார், பாஜக இளைஞரணி தலைவர் பமீலாவின் கைப்பை மற்றும் காரின் இருக்கைக்கு அடியில் இருந்து சுமார் 100 கிராம் அளவிலான கோக்கைன் போதைபொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காரில் அவருடன் சென்ற நண்பரையும் கைது செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வரும் வேளையில் போதைபொருள் வழக்கில் பாஜக இளைஞரணி பெண் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.